இவர் பெயர் அறிவாளியாம்?! சிதம்பரம் என்ற வரலாற்றுப் பிழையின் விஷக் கருத்து!

p chidambaram - 2026

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா, அரசியல் சட்டத்துக்கு எதிரானது என மக்களவையின் ப.சிதம்பரம் பேசினார். சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தும் இந்த சட்டத்தை நிறைவேற்ற நினைப்பது மோசமான செயல் என்றார் அவர்.

எப்படி இஸ்லாமியர்களளையும் பிற மதத்தினரையும் அடையாளம் காண்பீர்கள் என்று கேள்வி எழுப்பும் ப.சிதம்பரம், இலங்கை இந்துக்களை சேர்க்காதது ஏன் ? பூட்டான் இந்துக்களை சேர்த்தது ஏன் ? அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும் என்றும் அரசுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

கிறிஸ்தவர்களை சேர்த்துவிட்டு இஸ்லாமியர்களை நீக்கியது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள ப.சிதம்பரம், இந்த கேள்விகளுக்கு பொறுப்பேற்று பதில் சொல்லப்போவது யார், நன்மை தீமைகளுக்கு பொறுப்பாளி யார் என்றார் ஆவேசத்துடன்!

குடியுரிமை மசோதாவில் இலங்கை மற்றும் பூடான் நாடுகளைச் சேர்ந்தவர்களை சேர்க்காதது ஏன் என அவர் கேள்வி எழுபியதில் இருந்தே, இந்த மசோதா குறித்து எந்த அளவுக்கு அவருக்கு அறிவு உள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிந்து விட்டிருக்கிறது என்கிறார்கள் விமர்சகர்கள்.

உண்மையில் அறிவாளி சிதம்பரம் என்றால், பிரச்னையின் உண்மை உணர்ந்து அதனை எடுத்து வைப்பவர் ஆக இருந்திருப்பார். ஆனால், சிதம்பரம் அப்படி இல்லை. இந்த குடியுரிமை மசோதா, முஸ்லிம் நாடுகள் என்று பிரகடனப் படுத்திக் கொண்டு, தங்கள் நாட்டின் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினரை அடித்துத் துரத்தி, முஸ்லிம்களாக மாற்றியும் மறுப்பவர்களை கொலை செய்தும் நிகழ்வுகளை நடத்தி வரும் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கன் ஆகிய நாடுகளில் இருந்து வரும் மக்களைக் காப்பாற்றத்தான்!

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

அடிப்படைவாத மத வெறி அரசியல் நடத்தும் முஸ்லிம் அண்டை நாடுகளில் இருந்து வெளியே வந்து இந்தியாவில் தஞ்சம் புகும் முஸ்லிம் அல்லாத மற்ற மதத்தவர்களைக் காப்பதற்கே இந்த சட்டத் திருத்தம் என்பது நன்கு தெரிந்தாலும், வேண்டுமென்றே திரித்துக் கூறி, இந்தியாவின் இரு வேறு மத நம்பிக்கையுள்ளவர்களிடையே சண்டையை மூட்டி விடும் செயலை, இந்த நாட்டை மத ரீதியாக பிளவு படுத்திய சிதம்பரம் போன்ற காங்கிரஸ் பிரமுகர்கள் செய்கிறார்கள்.

மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது:

குடியுரிமை மசோதாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் போது, அந்த மசோதா சட்டவிரோதம் என அறிவிக்கப்படும்.
இந்த மசோதா நாடாளுமன்றத்துக்கு இழைக்கப்பட்ட அவமானம்.
இந்த மசோதாவைக் கொண்டு வந்திருக்கக்கூடாது. இந்த மசோதாவில், பூடான், இலங்கையை சேர்க்காதது ஏன்?
மசோதா குறித்து அட்டர்னி ஜெனரல் கருத்தை கேட்டீர்களா? அவர் இங்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும். இதற்காக அவரை, இங்கு அழைத்து வர மத்திய அரசுக்கு தைரியம் உள்ளதா?

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

ஹிந்துத்துவாவை முன்னெடுப்பதற்காக இந்த மசோதாவை பாஜக., கொண்டுவந்துள்ளது. நாட்டை நீதிமன்றங்கள் தான் காப்பாற்ற வேண்டும். குடியுரிமை மசோதா அரசியல் சாசன விதிகளை மீறியது. மதரீதியாக துன்புறுத்தப்படுபவர்களுக்கு மட்டுமே குடியுரிமை என இந்த மசோதாவில் அறிவிக்கப்பட்டது ஏன்? என்று பேசினார் சிதம்பரம்..

மசோதாவின் நோக்கத்தையும், நடைமுறை சிரமங்களையும் தெரிந்து கொண்ட போதும், இந்த மூன்று இஸ்லாமிய நாடுகளில் இருந்தும் நெருக்கடியால் இந்தியாவுக்குத் தஞ்சம் புகும் கிறிஸ்துவர்களுக்கும் சேர்த்துதான் காங்கிரஸ் கட்சியும் அதற்கு துணை போகிறவர்களும் துரோகமும் தீங்கும் இழைக்கிறார்கள் என்பது, ப.சிதம்பரத்தின் பேச்சில் இருந்தே நன்கு புரிந்து கொள்ள முடியும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories