பா.ஜ.க. மாநில பொ.செ. சரவணபெருமாள் மறைவு: பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்

21/02/2017
இரங்கல் செய்தி
பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் திரு. சரவணபெருமாள் அவர்கள் மறைவு – இரங்கல் செய்தி
மாண்புமிகு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைதுறை மற்றும் கப்பல்துறை இணையமச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்தி
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பா.ஜ.க.வின் வளர்சிக்காகவும், தேசிய சிந்தனை மேலோங்குவதற்காகவும் உழைத்த பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் திரு. சரவணபெருமாள் அவர்கள் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இன்று (21/02/2017) காலை ஈசனடி சேர்ந்தார்.
தூத்துக்குடி நகரத்தில் செல்வமிக்க குடும்பத்தில் பிறந்து, குடும்பத்தின் மேன்மைக்காக வியாபாரத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டும், பா.ஜ.க.வின் கட்சிப் பணியையும் தொய்வில்லாமல் செய்துவந்த திரு சரவண பெருமாள் அவர்கள்  1995ஆம் ஆண்டு முதல் ஒரு முழுநேர ஊழியரைப் போல கட்சிப்பணி ஆற்றி வந்தார். கட்சியின் பல்வேறு பொறுப்பை திறம்பட  வகித்து மாநிலத்தின் பொதுச்செயலாளராக உயர்ந்தார். குடும்பத்தில் ஒரே ஆண் வாரிசான அவருக்கு திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் பெரும் முயற்சி செய்த போதெல்லாம் கட்சிப் பணிக்கு அது தடையாக இருக்கும் என்று திருமணமே செய்துகொள்ளாமல் கட்சிக்காக முழுநேரமும் உழைத்து வந்தார்.
திரு. சரவணபெருமாள் அவர்கள் மிகச் சிறந்த சிவ பக்தர். அன்றாடம் பூஜை புனஸ்காரம் செய்யும் பழக்கம் உள்ளவர். தனது உடல்நிலை சர்க்கரை நோயினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு காலில் பல விரல்கள் அகற்றப்பட்ட போதும் விடாப்பிடியாக கட்சிப் பணியை தொடர்ந்தார். அகில இந்திய தலைவர் திரு. அமித் ஷா அவர்கள், அகில இந்திய பொதுச் செயலாளர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பல தலைவர்கள் அவரை சற்று ஓய்வெடுக்க வற்புறுத்திய போதும் கட்சிப் பணியை ஒதுக்கித் தள்ள அவரது மனம் இடம் கொடுக்கவில்லை.
     இரண்டு மாதங்களுக்கு முன்பாக மஞ்சள்காமாலை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த போது சிறிது நாள் ஓய்வெடுங்கள் என்று கட்சியின் அனைத்து தலைவர்களும் அறிவுறுத்திய போதும் தனது உடல்நிலையை பெரிதாகக் கொள்ளாமல் பெரம்பலூரில் நடைபெற்ற தமிழக பா.ஜ.க பயிற்சி முகாம் மற்றும் செயற்குழு பணிக்காக 6 நாட்கள் அங்கேயே தங்கி பணிப்புரிந்தார்கள். அவரது அரசியல் வாழ்வில் எந்த ஒரு பொழுதிலும் தன்னை முன்னிறுதிக்கொள்ள தயங்கியவர். அப்பழுக்கற்ற அரசியல்வாதிக்கு இலக்கணமாகவும், எந்த ஒரு நிலையிலும் கட்சியை தன் குடும்பத்திற்காக சிறிதும் பயன்படுத்தாத பண்பாளராகவும் திகழ்ந்தவர்.
     தமிழ்நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளையும் முழுமையாக அலசி ஆராய்ந்து புத்திபூர்வமான தெளிவினை கொடுக்கும் வல்லமை பொருந்தியவர். இப்படி பல சிறப்பு இயல்புகளை தன்னகத்தே கொண்டு விளங்கிய திரு. சரவணபெருமாள் அவர்களுடைய இழப்பு, தேசிய சிந்தனையும், தமிழ் உணர்வும் கொண்ட நம் அனைவருக்கும் பேரிழப்பாகும். கீதையில் சொல்லப்படுவது போல எதிரிகள் இல்லா மனிதனாக கடைசிவரை வாழ்ந்து மறைந்திருக்கிறார். இந்நேரத்தில் அன்னாருடைய ஆன்மா நற்கதி அடையவும், அவரது இழப்பை தாங்கும் மன வலிமையை அவரது குடும்பத்தாருக்கு இறைவன் அளித்திடவும் எனது பிரார்த்தனைகள்.
–    பொன். இராதாகிருஷ்ணன்
ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories