பிப்ரவரி 28-ம் தேதி வங்கிகள் வேலைநிறுத்தம் நடைபெறவுள்ள நிலையில், வங்கி சேவைகள் 75 சதவீதம் கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பணம் கிடைக்க வேண்டும், பண மில்லா பரிவர்த்தனை செய்வதை கட்டாயப்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 28-ம் தேதி பொதுத் துறை வங்கிகள் சார்பில் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், வாரத்துக்கு 5 நாட்கள் வேலை நாளாக அறிவிக்க வேண்டும், வங்கி ஊழியர்களுக்கு அடுத்த ஊதிய உயர்வுக் கான நடவடிக்கைகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும், வங்கிப் பணிகளை அயல்பணிகளாக அளிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
இதில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். 9 வங்கி சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் கடந்த ஜனவரி 31-ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்  இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில்,  வங்கி சங்கங்களில் உள்ள பெரும்பாலான பொதுத் துறை வங்கிகள் வேலைநிறுத்தம் அறிவித்த்துள்ளதால் பணப்பரிவர்த்தை சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
இருப்பினும் ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எப்.சி, ஆக்சிஸ் மற்றும் கோடக் மகேந்திரா ஆகிய தனியார் வங்கிகள் வழக்கம் போல் தொடரும் என்று தெரிகிறது.
ஆனால் இதில் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் கீழ் இயங்கும் தேசிய வங்கி ஊழியர்கள் அமைப்பு இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்காது என்று தெரிகிறது.
27 பொதுத் துறை வங்கிகள் தான் 75 சதவீத வர்த்த பணப் பரிமாற்றத்தை மேற்கொள்கிறது. இதனால் வங்கி சேவைகள் முடங்க வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கபடுகிறது.
.எம்.விஜயன்
ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending