சின்னத்திரை நடிகையின் கணவர் தூக்கிட்டு தற்கொலை!

சற்றுமுன்
reka - 2026

சென்னை பெரம்பூரில் உள்ள நடராஜன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் அண்ணாநகரில் உள்ள தனியார் விளம்பர நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப்பின் 26-ஆம் தேதி காலை, ஊழியர் ஒருவர் அலுவலகத்தை திறக்கச் சென்றார்.

அப்போது அலுவலகத்தின் கதவு பூட்டப்படாமல் இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது ஒரு அறைக்குள் கோபிநாத் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, அந்த ஊழியர் அதிர்ச்சி அடைந்தார்.

தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தற்கொலை செய்து கொண்ட கோபிநாத்துக்கு ரேகா என்ற மனைவி உள்ளார்.

reka 2 - 2026

விசாரணையில் கோபிநாத் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு காதலித்து டிவி சீரியல் நடிகையும், தொகுப்பாளினியுமாகிய ரேகா என்பவரை திருமணம் செய்து இரண்டு மகன்கள் உள்ளார். ரேகா பிரபல தனியார் தொலைக்காட்சி நாடகங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.சினிமாவிலும் துணை நடிகையாக
நடித்து வருகிறார்.

கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். கோபிநாத்துக்கும், வேறொரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது.

அதனால் தம்பதியருக்கு இடையே நாளுக்கு நாள் பிரச்னை அதிகரிக்க, இருவருக்கிடையேயான உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியிருக்கிறது.

மேலும் கடன் பிரச்னையும் கோபிநாத்திற்கு இருந்துள்ளது. சூழலில், வழக்கம்போல் கோபிநாத்துக்கும், ரேகாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த அவர், தனது அலுவலகத்திற்கு சென்று தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அலுவலகத்திற்கு மொத்தம் 3 சாவிகள் இருப்பதாகவும், அதில் ஒன்று கோபிநாத்திடம் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, கோபிநாத்தின் தற்கொலைக்கு வேறு ஏதும் மர்மங்கள் உள்ளதா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.