பாகிஸ்தானைப் பற்றியே மோடி பேசுகிறார்: ‘முஸ்லிம்களைப் பற்றியே சிந்திக்கும்’ மம்தா குற்றச்சாட்டு!

சற்றுமுன்
mamta banarjee - 2026

பிரதமர் மோடி, பாகிஸ்தானை பற்றியே அதிகம் பேசுகிறாரே ஏன் என்று, முஸ்லிம்களைப் பற்றியே அதிகம் சிந்தித்துக் கொண்டிருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடந்தது.

அந்தப் பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடி வருகிறேன். மக்கள் அனைவரும் என்னுடன் கைகோக்க வேண்டும். ஜனநாயகத்தை காக்க, அனைவரும் முன்வர வேண்டும்.

மோடி இந்தியாவின் பிரதமர். ஆனால் பாகிஸ்தானை பற்றியே அதிகம் பேசுகிறார். இதற்கு காரணம் என்ன? நாம் அனைவரும் இந்தியர்கள். நமது நாட்டு விவகாரங்கள் குறித்து பேசலாம்… என்றார்.

வங்கதேசத்தில் இருந்து கள்ளத்தனமாக இந்தியாவின் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறி, உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்துக் கொண்டிருகும் முஸ்லிம்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை தொடங்கி அனைத்து அரசின் பலன்களையும் கொடுத்து, வாக்கு வங்கி அரசியலை நடத்திக் கொண்டிருக்கும் மம்தா பானர்ஜிக்கு, இவ்வாறு கேள்வி கேட்க எந்த தார்மீக உரிமையுமில்லை என்று சமூகத் தளங்களில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.