தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயசரிதைத் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் பாலிவுட் நாயகி கங்கனா ரனாவத் நடிக்கிறார். ஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார்.
அவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகிறது.
இப்படத்தை மதராசப்பட்டினம், தலைவா, தெய்வத் திருமகள் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் விஜய், இருமொழிகளிலும் இயக்குகிறார்.
இத்திரைப்படத்தின் கதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும், இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். இசை – ஜி.வி. பிரகாஷ். ஜூன் 26 அன்று வெளியாகவுள்ளது.
தலைவி படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கிறார் அரவிந்த் சாமி. இந்நிலையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளான இன்று, அரவிந்த் சாமியின் கதாபாத்திரத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இப்படத்தின் டீசர் இன்று 10.30 மணியளவில் வெளியிடப்பட்டது
இப்படத்தில் அரவிந்சாமியின் அர்பணிப்பு குறித்து இயக்குநர் ஏ.விஜய் பேசுகையில், “3 மாதங்களாக எம்ஜிஆர் போல நடிக்க தன்னை தயார் செய்துக்கொண்டிருந்தார் அரவிந்த்சாமி. ஜெயலலிதா வாழ்வில் இரண்டு பேர் மிக முக்கியமானவர்கள். ஒன்று தாய் மற்றொன்று எம்ஜிஆர் என்று நேர்கானலின் போது அவரே கூறியிருப்பார். எனவே எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அதிகபட்சம் கவனம் செலுத்தி வருகிறோம்.” என்றார்.
Here is my first look as Puratchi Thaliavar, Makkal Thilagam MGR in #Thalaivi . A teaser follows at 10.30 am today. Hope u like it ???? pic.twitter.com/LjnN6Ybwrw
— arvind swami (@thearvindswami) January 17, 2020
Here is the FL of @thearvindswami as Puratchi Thalaivar Dr #MGR in Dir #Vijay – #KanganaRanaut ‘s Late TN Ex-CM Amma Dr. J.Jayalalithaa Bio-pic #Thalaivi pic.twitter.com/iSsmegVuiT
— Ramesh Bala (@rameshlaus) January 17, 2020