அங்கே பள்ளிக்கட்டு… இங்கே பல்லக்காட்டு! வலைத்தளவாசிகளிடம் வறுபடும் ஓபிஎஸ்.,!

sabarimalai ops - 2026

ஐயப்பனை பத்தி அசிங்கமா பெரியார் சொன்னத பாக்கதான் சபரிமலை போனாரா? வறுபடும் ஓபிஎஸ்.,!

முன்னாள் முதல்வராக இருந்து இந்நாள் துணை முதல்வராக பதவி ஏற்றம் கண்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ள கருத்து, இப்போது சமூகத் தளங்களில் பரவலாக விமர்சிக்கப் பட்டு வருகிறது. திராவிட அரசியல் மாயையில் சிக்கிக் கொண்டுள்ளவர்களில் ஓபிஎஸ்ஸும் ஒருவர் என்று அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் பலர்.

சபரிமலை க்கு போயிட்டு மாலைய கழட்டிட்டு திராவிட அரசியல் பண்றாராமா? – என்று கேள்வி எழுப்புகின்றனர் சிலர். அதற்குக் காரணம், சபரிமலைக்குச் சென்று வந்த கையுடன் ரஜினி குறித்த அரசியலில் சிக்கிக்கொண்டு அவராகத் தெரிவித்துள்ள ஒரு கருத்துதான்!

நான் இந்த உயரிய நிலையை அடைய காரணம் தந்தை பெரியார்! அவரை பற்றி தெரிந்து பேச வேண்டும்! என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பதைப் பதிவு செய்து, நான் கூட ஜெயலலிதா சசிகலா என இதுவரை தப்பா நினைச்சிட்டேன் என்று கருத்திடுகிறார்கள் சிலர்.

meme ops - 2026

பெரியாருக்கு ஆதரவாக பேசுகிற ஸ்டாலின், திருமாவளவன், வீரமணி இவர்கள் மீது பாய்ந்து பிராண்டுகிற நம்ம ஆட்கள் ஜெயகுமார். பன்னீர்செல்வம் என்றால் எதுவும் தெரியாதது போல் இருப்பது ஏன்? யாருக்காவது காரணம் தெரியுமா? நம்ம கட்சி பாஜக என்று கருத்துப் பதிவு செய்துள்ளார் பாஜக., பிரமுகர் ஒருவர்.

ALSO READ:  சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

‘ஆணுக்கும் ஆணுக்கும் பிள்ளை பிறக்குமா? ஐயப்பன் கதை அறிவுக்குப் பொருந்துமா?” – இது ஈவெரா வழித்தோன்றல்களின் கோஷம். இதை இவர் அந்தச் சபரிமலைக்கு இரு முடி தாங்கிப் போய்க் கேட்டுவிட்டு வந்தாராமோ!? என்று காட்டமாகவே விமர்சிக்கிறார்கள் சமூகத் தளங்களில்!

பெரியாரின் கருத்துக்கள் கோபுரத்தில் வைக்க வேண்டிய பொன் மொழிகள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ள கருத்துக்கு பதில் கருத்தாக, அப்படி புகழ் மிக்க கருத்துக்கள் என்னவென்று யாருக்காச்சும் தெரியுமா? தெரிஞ்சா செல்லுங்களேன் . . ! என்று ஒருவர் கேட்டிருக்கிறார். அதற்கு பதிலாக ஒருவர் அந்தப் புகழ்மிக்க கருத்துகளையும் பதிவு செய்திருக்கிறார்.

ஈ.வே.ரா.,வின் அந்தப் புகழ்மிக்க கருத்துகளில் சில என்று பதிவு செய்திருப்பவை….

நான், கன்னடியன், கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன்.

தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகிறேன்.

பிராமணனுக்குப் பயந்து சிறுபான்மையினரான இஸ்லாமியர்களை ஆதரிப்பது மலத்தை மிதிப்பதற்கு ஒப்பானது

”திருமணம் என்பதையே கிரிமனல் குற்றமாக கருத வேண்டும் என்று சொல்லி வருகிறேன்” (விடுதலை 11/10/1967) – அதிகாரப்பூர்வமாக இரு திருமணங்களை செய்து கொண்டவர்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

ஆண்களைப் போலவே பெண்களும் தயாராக இருக்க வேண்டும். ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டால் பெண் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள வேண்டும் (மு.கருணாநிதி இணைவி, துணைவி, மனைவி என்று வைத்துக் கொண்டதை போல் அவரது இணைவி, துணைவியும் என்று சொல்கிறாரோ?)

கடவுளை ஒழிக்க வேண்டுமானால் பார்ப்பானை ஒழிக்கவேண்டும்.
(விடுதலை 19-10-1958)

அடுத்தவர் மனைவியை அபகரிப்பது இந்திய பீனல் கோட் படி குற்றமல்ல என்று அரசு ஆணை விதிப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – 1971 ஆம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானங்களிலிருந்து

மேலே உள்ளவை எல்லாம் ராமசாமி நாயக்கர் ஒவ்வொரு சமயத்தில் சொன்ன கருத்துகள்.

ராமசாமி நாயக்கர் சொன்ன கருத்துகளை எல்லாம் கோபுரத்தில் வைக்க வேண்டும்னு தாய் மாமர் ஓ.பி.எஸ் நேற்று ஆவாஜ் தந்தார்.

டவுட் : மேலே சொன்ன கருத்துகளை கோபுரத்தில் வைத்த பின்பு சபரி மலைக்கு மாலை அணிந்து அந்த கோபுரத்தை தரிசிக்க வேண்டுமா? அல்லது மாலையை கழற்றியபின்பு தரிசிக்க வேண்டுமா? இல்லை ராமபிரான் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து செருப்பால் அடித்தபடி கோபுர தரிசனம் செய்ய வேண்டுமா?

இது பற்றி இன்னிக்கு விரிவா அறிக்கை விடுவீங்களா ஐயா? என்று Sathya GP என்பவர் பதிவு செய்துள்ளார்.

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

பாஜக., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி இதுகுறித்து பகிர்ந்துள்ள கருத்து:

தந்தை பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை- பெரியார் பற்றி ரஜினியின் பேச்சு குறித்து துணை முதல்வர் ஓ பிஎஸ் .
“பெரியார் பெயரில் நிர்மாணிக்கப்பட்ட மதுரை பேருந்து நிலையத்தை, கோயில் கோபுர வடிவத்தில் அமைப்பது எந்த வகையில் சரியானதாகும்? பெரியாரைக் கொச்சைப்படுத்துவதோடு அல்லாமல், அப்படி வைக்கப்படும் கோயில் கோபுரமும் காலாகாலத்திற்கும் வீண் சர்ச்சைக்கும், வெறுப்புக்கும் உரியதாகவே ஆகும் என்று எச்சரிக்கிறோம்” : கி. வீரமணி, 31/08/2019 அன்று.
ஓ பி எஸ் பதில் சொல்வாரா?

ஓபிஎஸ்., நேற்று ஐயப்பன் தரிசனம். இன்று பெரியாருக்கு கோபுரம்! உங்க கொள்கையில தீய வைக்க – என்று சாடியிருக்கிறார் ஒருவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories