17, 15 வயதில் பிள்ளைகள் இருக்க.. கள்ளக் காதல்! கடற்கரையில் விஷம் குடித்து தற்கொலை!

சற்றுமுன்
beach body - 2026

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் நேற்று அதிகாலையில் 45வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 35 வயது மதிக்கத்தக்க பெண் இருவரும் வாயில் நுரைதள்ளிய படி சடலமாக கிடந்தனர்.

அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுக்கவே, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

poison - 2026

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இறந்தவர்கள் சிவகாசி அருகே உள்ள அம்மன் கோவில்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த கணேசமுத்து மற்றும் சிவகாசி சாமிபுரம் காலனியைச் சேர்ந்த லட்சுமணன் மனைவி ஜெயலட்சுமி என்பதும் தெரியவந்தது.

சமையல் தொழில் செய்யும் கணேச முத்துவுக்கு திருமணமாகி விஜயராணி என்ற மனைவியும் 17 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அதேபோல் ஜெயலட்சுமிக்கும் திருமணமாகி 13 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

samaiyal - 2026

கணேசமுத்துவும், ஜெயலட்சுமியும் சமையல் தொழில் செய்து வந்ததால் ஒன்றாக வேலைக்கு சென்று வந்துள்ளனர். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இது குடும்பத்துக்கும் தெரியவர அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளனர். இருப்பினும் கணேசமுத்துவும் ஜெயலட்சுமியும் தொடர்ந்து பழகிவந்துள்ளனர்.

love - 2026

இதுதொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணேசமுத்துவை அவருடைய அண்ணன் கண்டித்ததாகத் தெரிகிறது. இதனால் மனம் உடைந்த அவர் நேற்று முன்தினம் கள்ளகாதலியுடன் தற்கொலை செய்துகொள்ள திருச்செந்தூர் வந்துள்ளார்.

பின்னர் திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.