முதல் ஒரு நாள் போட்டி… நியூஸிலாந்து வெற்றி!

சற்றுமுன் லைஃப் ஸ்டைல் விளையாட்டு
nz vs afg - 2026

இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹாமில்டனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 347 ரன் சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 103 ரன்களும், கே.எல். ராகுல் 88 ரன்களும் குவித்தனர்.

தொடர்ந்து 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி, தொடக்கத்தில் திணறினாலும் பின்னர் அதிரடியாக விளையாடி மிரட்டியது.

டெய்லர் 84 பந்துகளில் 109 ரன்களும், லாதம் 48 பந்துகளில் 69 ரன்களும் குவிக்க, 49வது ஓவரில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 348 ரன்களை எடுத்து வெற்றி பெற்றதுநியூசிலாந்து.

இதன்மூலம் நியூசிலாந்த் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆக்லாந்தில் வரும் 8ஆம் தேதி 2ஆவது போட்டி நடைபெறவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.