என்ன..? கொரோனாவ கிண்டல் செய்து வாட்ஸ்அப்ல தகவல் பரப்பினா … ஜெயிலா?!

உரத்த சிந்தனை சற்றுமுன் தொழில்நுட்பம் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
whatsapp corona - 2026

கொரோனாவை பற்றி கிண்டல் செய்து வாட்ஸப்பில் தகவல் பரப்பினால் நடவடிக்கை என்று கூறப் படுவது ஒரு வதந்தியே; அதுபோன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கொரோனாவை பற்றி மீம்ஸ் போட்டால் வாட்ஸப் அட்மின், உறுப்பினர்கள் மீது நடவடிக்கை என கடந்த சில நாட்களாக, வாட்ச் அப் குழுக்களில் வதந்தி பரவி வருகிறது. தவறான தகவல்களை வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில் என்று தலைப்பிட்டு, பகிரப்படும் செய்தியில்…

தவறான தகவல்கள், COVID-19 பற்றி மோசமான வீடியோக்களை வாட்ஸ்அப் அல்லது ஃபேஸ்புக் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு மற்றும் பகிர்ந்த உறுப்பினருக்கு ஜெயில் தண்டனை வழங்கலாம்’ உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், ‘பல வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் குரூப்களில் உண்மை இல்லாத பல செய்திகள் பரவவிடப்படுகின்றன. இந்த மாதிரி தகவல்கள் சரியாகத்தான் இருக்கிறதா என்று பார்க்காமலேயே பகிரப்படுகின்றன. அப்படிப்பட்ட தகவல்களைப் பரவவிடும் குரூப்பில் இருக்கும் நபரை, குரூப் அட்மின் நீக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட நபர் பற்றி அருகில் இருக்கும் காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும். குரூப் அட்மின் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் அல்லது வாட்ஸ்-அப் குரூப்பில் பரவும் தவறான தகவல்கள் மற்றும் மோசமான வீடியோக்களால் பல பிரச்னைகள் வர வாய்ப்பு இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் மட்டும் 20 கோடிக்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனர்கள் இருக்கின்றனர்…. என்று குறிப்பிடப் பட்டு வாட்ஸ் அப் களின் வழியே செய்தி பகிரப் படுகின்றது. இதனால் பலர் வாட்ஸப் குரூப்களை அட்மின்கள் மட்டுமே செய்தி பகிரும் வகையில் மாற்றிக் கொண்டனர். பலர் வாட்ஸ் அப்பில் கொரோனா குறித்த செய்தி வந்தாலே பயந்து டெலிட் செய்தனர்!

இவ்வாறு கொரோனா குறித்து அச்சம் ஊட்டும் வகையில் செய்தி பகிர்ந்து தவறான வதந்திகளைப் பரப்புவது மிகவும் தவறுதான்! இருந்தாலும் சாதாரண மக்களையும் பயமுறுத்தும் வகையில் இவ்வாறு வதந்தி பரப்புவதும் தவறுதான்! இந்நிலையில், வாட்ஸ் அப் குறித்து வரும் தகவல் வெறும் ஒரு வதந்தியே என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.