திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இசையமைப்பாளர் மரணம்!

இந்தியா சினிமா பொது தகவல்கள்
music director - 2026

கொரோனா வைரஸால் தற்போது சின்னத்திரை, வெள்ளித்திரை முடங்கியுள்ளன. படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. தினக்கூலி பணியாளர்கள் உணவுக்கு வழியில்லாமல் திண்டாடும் நிலை எழுந்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க அண்மையில் நடிகர் விசு, சேது, பரவை முனியம்மா என பலர் உயிரிழந்தனர். இது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மலையாள சினிமாவை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன் கொச்சியில் உடல் நலக்குறைவால் காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் இசைப்புயல் ரஹ்மான் முதன் முதலாக இவரிடம் தான் கீ போர்டு வாசிக்கும் பணியில் சேர்ந்தாராம். இந்நிலையில் அர்ஜூனனின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.