ஆயிரம் குடும்பங்களுக்கு நலத் திட்ட உதவி வழங்கிய செங்கோட்டை அதிமுக., நகரச் செயலர் கிருஷ்ணமுரளி!

சற்றுமுன் தமிழகம் நெல்லை

செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகளை நகரச் செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா வழங்கினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியுடன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைகிணங்கவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா ஆகியோரின் ஆலோசனையின்படியும், செங்கோட்டை நகரத்திற்கு உட்பட்ட சலவைத் தொழிலாளர்கள், சவர தொழிலாளர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள், வாடகை கார், வேன் ஓட்டுனர்கள், அம்மா உணவக பணியாளர்கள் உட்பட சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பை வழங்கும் நிகழ்ச்சி செங்கோட்டை நகர அதிமுக சார்பில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் செங்கோட்டை நகரச் செயலாளர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா கலந்து கொண்டு ஆயிரம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியல் முன்னாள் நகர்மன்ற தலைவர் மோகனகிருஷ்ணன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.