தமிழகத்தில் இன்று பாதிப்பு 765; சென்னையில் மட்டும் 587 பேருக்கு கொரோனா உறுதி!

Published:

china coronavirus
china coronavirus

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது சுகாதாரத்துறை. சுகாதாரத்துறையின் அறிக்கைப் படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டிருக்கிறது. இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 587 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஒரே நாளில் கொரோனாவுக்கு 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, இதுவரை தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 111ஆக அதிகரித்துள்ளது. இன்று தமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 587 பேருக்கு கொரோனா பாதிப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 765 பேரில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 587 பேர். பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 10,576 ஆக அதிகரித்துள்ளது. இன்று செங்கல்பட்டில் 46 பேரும், திருவள்ளூரில் 34 பேரும், காஞ்சிபுரத்தில் 21 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் அதிகபட்ச பாதிப்பாக கள்ளக்குறிச்சியில் மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளன

சுகாதாரத்துறை அறிக்கை…

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?
covid maya
covid maya
covid mayd
covid mayd
covid mayb
covid mayb
covid mayc
covid mayc

Related articles

Recent articles

spot_img