கோயில்களில் பக்தர் வழிபாட்டுக்கு அனுமதிக்கக் கோரி இந்துமுன்னணி நூதன பிரார்த்தனை!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
hindu munnani
hindu munnani

கோயில்களில் பக்தர்களின் வழிபாட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி இந்துமுன்னணி அமைப்பு நூதன பிரார்த்தனைக்கு ஏற்பாடுசெய்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்…

நூதன வேண்டுதல் பிரார்த்தனை..: உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த அச்சத்திலிருந்து மக்கள் மீண்டு வரவும், தன் நம்பிக்கையோடு சவால்களை எதிர்கொள்ள ஆன்மீக நம்பிக்கை துணை நிற்கும். எனவே, ஆலயங்கள் கட்டுப்பாட்டுடன் பக்தர்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என அரசை கேட்டுக் கொள்கிறோம்.

உலகம் மக்கள் நலமுடன் வாழவும், கொரோனா நோய் தொற்று மறையவும், நமது பாரதமும், தமிழகமும் சுபிட்சம்பெறவும் இந்து முன்னணி சார்பில் கீழ்க்கண்ட நூதன வேண்டுதல் பிரார்த்தனை தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெற இருக்கிறது. சென்னை மாநகரில் 150 திருக்கோயில்களில் நடைபெற இருக்கிறது.

ஒவ்வொரு கோயிலிலும் மூவர் மட்டுமே பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். சமூக இடைவெளிவிட்டு கற்பூர தீபம் காட்டி, தோப்புகரணம் போட இருக்கிறார்கள். அதுசமயம், மத்திய, மாநில சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படி, முறையான முன் எச்சரிக்கையுடனும் பொதுநலம் கருதியும் செயல்படுவார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

நாள் : 26.5.2020  செவ்வாய் கிழமை நேரம் :  காலை 9 மணி  முதல் 10.30 மணி வரை.

இந்து முன்னணி மாநில, மாநகர பொறுப்பாளர்கள் கீழ்க்காணும் கோயில்களில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

  • திரு. த. மனோகரன், மாநிலச் செயலாளர் அருள்மிகு வடிவுடையம்மன்  திருக்கோயில், திருவொற்றியூர்
  • திரு. ஏ.டி.இளங்கோவன், மாநகரத் தலைவர்  அருள்மிகு குறுங்காலீஸ்வரர்  திருக்கோயில், கோயம்பேடு.
  • திரு. ஆர். கிருஷ்ணமூர்த்தி, மாநகரப் பொருளாளர்  வடபழனி முருகன் திருக்கோயில்,  வடபழனி
  • திரு. சிவ. விஜயன், மாநகரச் செயலாளர்  அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள்  கோயில், திருவல்லிக்கேணி
  • திரு. பி. மேகநாதன், மாநகரச் செயலாளர்  அருள்மிகு கபாலீஸ்வரர்  திருக்கோயில், மயிலாப்பூர்… – என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.