விமானத்தில் வந்தாலும்… தமிழகத்துக்குள் வர இ-பாஸ் அவசியம்! e-pass பெற…

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
e pass 1 - 2026

தமிழகத்துக்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப் பட்டுள்ளன.

மே.25 – இன்று முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், உள்நாட்டு விமான பயணம் குறித்து தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

அதன்படி…

பயணிகளின் உடல்நிலை, தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வருகிறார்களா? என்ற விவரங்களை பதிவிட வேண்டும். தவறான தகவல் அளிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் இருப்பின் சிகிச்சை அளிக்கப்படும். இல்லையெனில் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர விரும்பும் விமான பயணிகள், தமிழக அரசின் இ-பாஸ் பெற வேண்டியது அவசியம். இ-பாஸில் 8 விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கும்.

விமானப் பயணிகள் கையில் தனிமைப்படுத்தப்படும் நாள் தொடர்பாக ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை பதிக்கப்படும். 14 நாட்கள் தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும்.

சொந்த வீடு இல்லாதவர்கள் பணம் செலுத்தி தனிமைப்படுத்தும் மையத்தில் சேர வேண்டும்.

திருச்சியில் இருந்து விமானங்கள் இயக்கப்படும். சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு விமான சேவை தொடங்கும்.

விமான நிலைய வாசல்களில் மாவட்ட ஆட்சியர்கள் சோதனை மையம் அமைக்க வேண்டும்.

பயணிகள் செல்லும் காரில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். பயணிகளின் உடைமைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படும். தேவையான பயணிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கப்படும்.

தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு வெப்ப பரிசோதனை நடத்தப்படும்… – என்று அதில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

tnepass
tnepass

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.