இரவோடு இரவாக முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்ட திருப்பரங்குன்றம் யானை!

சற்றுமுன் தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்
thirupparankundram elephant deivanai
thirupparankundram elephant deivanai

பாகனை ஆவேசத்தில் தூக்கி எறிந்து கொன்ற திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானை இரவோடு இரவாக முகாமுக்கு மாற்றப் பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் முதல்படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள தெய்வானை  யானை கடந்த சில நாட்களுக்கு முன்பு  காளிதாஸ் எனும் பாகனை தாக்கியது. இதில் பாகன் உயிரிழ்நதார்.

இதனைத் தொடர்ந்து யானையை வனத்துறை முகாமுக்குக் கொண்டு சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை பரிந்துரையின் பேரில் நேற்று நள்ளிரவு   ஒரு மணியளவில் திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து  வனத்துறையினர் பாதுகாப்புடன் திருச்சி அருகிலுள்ள எம் ஆர் பாளையம் வனத்துறை முகாமுக்கு தெய்வானை யானை கொண்டு செல்லப்பட்டது.

  • செய்தி: ரவிச்சந்திரன் , மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.