சீன பொருட்களை புறக்கணிக்கக் கோரி ஜூன் 5ல் இந்து மக்கள் கட்சி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
arjun sampath
arjun sampath file pic

சீன பொருட்கள் புறக்கணிப்பு; சீன ஆதரவு கம்யூனிஸ்ட் கட்சிகளை தடை செய்தல்; இந்திய இராணுவ வீரர்களுக்கு ஆதரவு உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தி ஜூன் 5ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறது இந்து மக்கள் கட்சி.

இது குறித்து கோரிக்கை மற்றும் புகார் மனு ஒன்றை அளித்திருப்பதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் குறிப்பிட்ட போது….

சீனா பொருட்கள் புறக்கணிப்பு – சீன ஆதரவு கம்யூனிஸ்ட் கட்சிகளை தடை செய்தல் இந்திய இராணுவ வீரர்களுக்கு ஆதரவு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவன் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்றும், முதல்வர், பிரதமர் உள்ளிட்டோருக்கு இது தொடர்பாக கோரிக்கை / புகார் மனு சமர்ப்பிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், வரும் ஜூன் 05 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் இ.ம.க மாவட்டக்
கிளைகள் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் என்று தெரிவித்தார் அவர்.

சீனப் பொருட்கள் புறக்கணிப்பு, சீன கம்யூனிஸ்ட் கட்சி கொடி புறக்கணிப்பு, சுதேசி தேசபக்தி முழக்கம் ஆகியவற்றுடன், கோரிக்கை புகார் மனு மாவட்ட நிர்வாகம்
மூலம் முதல்வர், பிரதமர் ஆகியோர் பார்வைக்கு வழங்கப்படவுள்ளன.

இமக., முன்வைக்கும் கோரிக்கைகள் :

 தமிழகத்தில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொம்மைகள், பட்டாசுகள், செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள், சீன உணவு மற்றும் துணிமணிகள் ஆகிய பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும். சீன வர்த்தக நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

 லே-லடாக் பகுதியில் இந்திய எல்லையை பாதுகாக்கும் இந்திய இராணுவ வீரர்களுக்கு ஆதரவு. சீன இராணுவத்திற்கு கண்டனம்

 ஹாங்காங் தன்னாட்சி சட்டத்தை நீக்கி ஹாங்காங் மக்களை அடிமைப்படுத்தும் சீன கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு கண்டனம். ஹாங்காங் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவு

 திபெத் நாட்டை ஆக்கிரமித்துள்ள சீனாவிடம் இருந்து திபெத்தை சுதந்திர நாடாக பிரகடனம் செய்ய வேண்டும். திபெத் மக்களின் சுதந்திரம், கலாச்சாரம், பண்பாடு, திபெத்திய பொழி ஆகியவற்றை அழிக்கும் சீன கம்யூனிஸ்டிடமிருந்து திபெத்தை பாதுகாக்க வேண்டும்.

 இந்தியாவிற்கு சொந்தமான சிவபெருமான் அருள்பாலிக்கின்ற புனிதமான மானஸரோவர் ஏரி மற்றும் திருக்கயிலாய மலையை சீனாவிந் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு இந்திய மக்களுக்கு சொந்தமாக்க வேண்டும்.

 கொரானா வைரசை உருவாக்கி உலகை அச்சுறுத்தும் சீனாவின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.

 சிக்கிம், பூடான் ஆகிய இந்திய எல்லைப்பகுதிகளில் சீனாவின் அத்துமீறலை முறியடிக்க வேண்டும்.

 தமிழகத்தில் சீனாவிற்கு ஆதரவாக செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சிகள், நக்சல் அமைப்புக்களை தடை செய்ய வேண்டும்.

 அருணாசலபிரதேச மாநிலைத்தை உரிமை கொண்டாரும் சீனா கம்யூனிஸ்ட் நாட்டை ஐ.நா உறுப்பு நாடுகள் பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

 தமிழகத்தில் சீனாவிற்கும், பாகிஸ்தானிற்கும் ஆதரவாக செயல்பட்டுவரும் கம்யூனிஸ்ட் சார்பு ஊடகங்கள் தி.மு.க சார்பு ஊடகங்களின் மீது தடை விதிக்க வேண்டும். .. என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.