marriage at madurai temple gate

மதுரையில் கோயில் வாசலில் நடந்த எளிமையான திருமணம்

மதுரை: மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் கோயில் வாசலில் ஞாயிற்றுக்கிழமை இன்று, அதிக கூட்டமின்றி, எளிய முறையில் நடைபெற்ற திருமணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

மதுரை ஆனையூரைச் சேர்ந்தவர் அகிலன் மற்றும் பாண்டீஸ்வரி. இவர்களது திருமணத்தை குடும்பத்தார் படைசூழ, மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடாசலபதி கோயிலில், ஜூன். 7ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தனராம்.

கொரோனா பாதிப்பால் கடந்த 56 நாட்களாக அனைத்து ஆலயங்களும் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அகிலன், பாண்டீஸ்வரி திருமணம் எளிய முறையில் மதுரை மாவட்ட மக்கள் நீதி மையத்தின் நிர்வாகிகள் முத்துராமன், குணா ஊள்ளிட்டோர் தலைமையில் உறவினர்கள் சிலர் முன்பாக நடைபெற்றது.

தல்லாகுளம் பெருமாள் ஆலயம் அடைக்கப்பட்டிருந்ததால், கோயில் வாசலில், பெருமாளை வேண்டி, மணமகன் அகிலன், மணமகள் பாண்டீஸ்வரி கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தார். உறவினர்கள் அங்கேயே வைத்து மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending