தொண்டர்களுக்கு ரஜினிகாந்த்தின் கொரோனா கால ‘அட்வைஸ்’ !

Published:

rajini 1 1

முகக்கவசம் அணிந்து சேவையாற்றுங்கள் ரஜினிகாந்த் தொண்டர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்கும் ரஜினி மன்றத்தினர் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு பணியாற்றுங்கள். கொரோனாவால் பல்வேறு நாடுகளும் பெரும் சிக்கலை சந்தித்துள்ளன. இந்த நிலையில், மன்றத்தினர் மக்கள் சேவையில் ஈடுபட்டிருப்பது மகத்தானது என அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் பாராட்டியுள்ளார்.

மேலும், கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத்தனமான அசுர அடி என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

rajini makkal mandram
rajini makkal mandram

தனது ரசிகர்களுக்கு ரஜினி எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இடைவிடாமல் தங்களது உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், எனது உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து கொள்கிறேன்.

அடிபட்ட உடனேயே வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும் கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத்தனமான அசுர அடி. 

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

இப்போதைக்கு இது தீராது போல் தெரிகிறது. இதனுடையே வலி வருங்காலங்களில் பல விதங்களில் நமக்கு பல கடுமையான வேதனைகளை தரும்.

உங்களது குடும்பத்தாரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களை பாதுகாப்பதுதான் உங்களது அடிப்படை கடமை எந்த சூழலிலும் சமூக இடைவெளியை கடைபிடிக் காமலும் மாஸ்க் அணியாமலும் இருக்காதீர்கள். ஆரோக்கியம் போச்சுன்னா! வாழ்க்கையே போச்சு!.

  • இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img