52 ஆயிரம் கடந்த பாதிப்பு; இன்று 2,141 பேருக்கு கொரோனா உறுதி!

Published:

corono
corono

தமிழகத்தில் இன்று மேலும் 2141 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 52 ஆயிரத்தைக் கடந்தது. 

தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 

தமிழகத்தில் இன்று 2141 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து  தமிழகத்தில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 52,000ஐ தாண்டியது .  தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,334ஆக உயர்ந்துள்ளது 

தமிழகத்தில் 2ஆவது நாளாக தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது சென்னையில் மட்டும் இன்று 1373 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுஉள்ளது

சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு 37,000ஐ   கடந்துள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,070ஆக  உயர்ந்துள்ளது தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 49 பேர்   உயிரிழந்துள்ளனர்! தமிழகத்தில் 2ஆவது முறையாக அதிகபட்சமாக 49 பேர்   இறந்துள்ளனர்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

தமிழகத்தில் கொரோனா  உயிரிழப்பு எண்ணிக்கை 600ஐ கடந்தது! தமிழகத்தில் கொரோனா   உயிரிழப்புஎண்ணிக்கை 625ஆக  அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து  குணமடைந்து இன்று 1,017 பேர் டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் இதை அடுத்து கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 28,641ஆக   உயர்ந்துள்ளது.

covidjuna
covidjuna

தமிழகத்தைச் சேர்ந்த 2096 பேருக்கு இன்று குரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளி மாவட்டம் வெளி மாநிலங்களை சேர்ந்த 50 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது இதை அடுத்து தமிழகத்தில் இன்றைய சோதனைகளில் கொரோனா தோற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 2,141 ஆக உள்ளது.

இன்று 49 பேர் உயிரிழந்துள்ளனர் இவர்களில் 13 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 36 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 625 ஆக அதிகரித்துள்ளது

covidjunc
covidjunc

இன்று சென்னையில் அதிகபட்சமாக 1373 பேருக்கு கரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் 123 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 115 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 55 பேருக்கும் இன்று உறுதி செய்யப்பட்டது

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

அடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் 19 பேருக்கும் தென்காசி மாவட்டத்தில் 33 பேருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் 26 பேருக்கும் கன்னியாகுமரியில் 10 பேருக்கும் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.

Related articles

Recent articles

spot_img