தமிழகத்தில் இன்று 3,713 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,939 பேருக்கு தொற்று உறுதி!

சற்றுமுன் தமிழகம்
corona worldwide
corona worldwide

தமிழகத்தில் இன்று 3713 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 3713 பேருக்கு கொரோனா உறுதியானது. தமிழகத்தில் 3ஆவது நாளாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 78,000ஐ தாண்டியது.

சென்னையில் மட்டும் இன்று 1,939 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 68 பேர்  உயிரிழந்து உள்ளனர்.

அதே நேரம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,737 பேர் டிஸ்சார்ஜ்  அதேநேரம் செய்ய வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர்.

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்துள்ளது . தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,335ஆக உயர்வு கண்டுள்ளது. அதுபோல், சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,699ஆக உயர்ந்துள்ளது. 

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 68 பேர் உயிரிழந்துள்ளனர் இதையடுத்து தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,000ஐ தாண்டியது. தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,025ஆக அதிகரித்துள்ளது

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 44,094ஆக உயர்வு கண்டுள்ளது. 

சென்னையை அடுத்து அதிகபட்ச அளவாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 248 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப் பட்டது. அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் 146 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 98 பேருக்கும் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.  

தென்மாவட்டங்களில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 218 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப் பட்டது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.