பாஜக., நிர்வாகியைத் தாக்கிய திமுக எம்எல்ஏ., மீது ‘அகில உலக வெள்ளாளர் உறவின்முறை’ ஆட்சியரிடம் புகார்!

Published:

dmk mla - 2026

மதுரை: மதுரை அருகே ஊமச்சிகுளத்தில் அடிப்படை வசதிகள் சரியில்லையென முகநூலில் பதிவிட்ட பெண்ணை அடியாட்களுடன் சென்று திமுக எம்எல்ஏ மூர்த்தி மிரட்டியதாக, அகில உலக வெள்ளாலர் உறவின் முறை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், புதன்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மதுரை அருகே உமச்சிக்குளத்தில் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது முகநூல் பக்கத்தில் மதுரை கிழக்கு தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லையென பதிவிட்டிருந்தராம். இதையடுத்து, திமுக எம்எல்ஏ தனது அடியாட்களுடன் சென்று, அப் பெண்ணை அசிங்கமாக பேசி, தகராறு செய்தராம்.

இதனால் அந்த பெண்ணின் குடும்பத்துக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க அகில இந்திய வெள்ளாலர் உறவின் முறை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணி மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

madurai mla petition
  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img