மருத்துவர்கள் தினம்: கவிதை மூலம் மருத்துவர்களுக்கு வாழ்த்து கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர்!

சற்றுமுன் தமிழகம்
dr day

உயிர்காக்கும் மருத்துவர்களின் கடமையை பாராட்டி அவர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் டாக்டர் பிதான் சந்திர ராய் அவர்களின் பிறந்த நாளான ஜூலை மாதம் முதல் நாள் மருத்துவர்கள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மருத்துவர் தினத்தையொட்டி முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் அறிக்கையின் வாயிலாக மருத்துவர்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே மருத்துவர் தினத்தையொட்டி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,

கண்கள் உறங்குவதும்
இதயம் உறங்காமல் இருப்பதும்
மருத்துவக் கடவுள்களின்
மகத்துவப் பணியால்
நரம்புகளில் கருணையை நிரப்பி
நாடித்துடிப்பில் சேவையை நிறுத்தி
தன்னுயிருக்கு அஞ்சாது
பெருந்தொற்று பரவிய பேரிடர் காலத்திலும் கனிவோடு கடமையாற்றும் உங்களுக்கு
#மருத்துவர்தினவாழ்த்துக்கள்  ‘ எனத் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்குமாம்; தமிழகத்துக்கு பேராபத்து: எச்சரிக்கும் இந்து முன்னணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.