தமிழகத்தில் இன்று… 5063 பேருக்கு கொரோனா உறுதி! 108 பேர் உயிரிழப்பு!

Published:

corona - 2026

தமிழகத்தில் இன்று 5063 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 108 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். அதேநேரம் தமிழகத்தில் இன்று 6,501 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்! 

தமிழகத்தில் இன்று 5063 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,68,285ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 1023 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,04,027ஆக உயர்ந்துள்ளது. 

 அதே நேரம் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 2,08,784  ஆக உயர்ந்துள்ளது. 

 தமிழகத்தில் இன்று 108 பேர் உயிரிழந்துள்ளனர் இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 4,349ஆக அதிகரித்துள்ளது. 

இன்று ஒரே நாளில் 55,122 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இதுவரை தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 27,86,250  ஆக உயர்ந்துள்ளது.

சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு வருகிறது. 

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

district wise corona detail in aug 04 - 2026

Related articles

Recent articles

spot_img