தாய் வீட்டுக்கு சென்ற காதலி! ஆத்திரத்தில் கணவனைக் கொன்ற கள்ளக்காதலன்!

Published:

murder-2-1

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை சாம்பவர் வடகரை பகுதியை சார்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 51). இவர் ஊர்மேல் அழகியான் சங்குபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி உஷா (வயது 40). இவர்கள் இருவருக்கும் விஷ்வா என்ற 14 வயது குழந்தையும், வினித் என்ற 12 வயது மகனும் இருக்கின்றனர்.

கடந்த வாரத்தின் போது, உஷா தனது மகன்களை அழைத்துக்கொண்டு சங்கரன்கோவிலை அடுத்துள்ள வேப்பங்குளத்தில் இருக்கும் தனது பெற்றோரின் இல்லத்திற்கு சென்றுவிடவே, முத்துப்பாண்டி தனது இல்லத்தில் தனியாக இருந்துள்ளார். நேற்று முன்தினத்தின் போது, முத்துபாண்டியின் இல்லத்திற்கு சென்ற சில நபர்கள், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி சென்றுள்ளனர்.

lovers

தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து முத்துபாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், சம்பவார் வடகரை பகுதியை சார்ந்த கோழிப்பண்ணை அதிபர் ஆறுமுகம் (வயது 35) உள்ளிட்ட 5 பேரை அதிரடியாக நேற்று கைது செய்தனர்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

இந்த விசாரணையில், முத்துபாண்டியின் மனைவியான உஷாவிற்கும், ஆறுமுகத்திற்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த முத்துப்பாண்டி தனது மனைவி மற்றும் ஆறுமுகத்தை கண்டித்துள்ளார். இதனால் கணவன் – மனைவி பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உஷா, தனது மகன்களை அழைத்து தனது பெற்றோரின் இல்லத்திற்கு சென்றுள்ளார்.

கள்ளக்காதலி அவரது பெற்றோரின் இல்லத்திற்கு சென்ற காரணத்தால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் தனது நண்பர்களான இசக்கி துரை (வயது 34), குரு (வயது 40), கந்தசாமி (வயது 35), செண்பகராஜ் (வயது 38) ஆகியோருடன் சேர்ந்து முத்துபாண்டியை கொலை செய்துள்ளனர்.

முன்னதாக முத்துபாண்டியை விபத்து மூலமாக கொலை செய்ய ஏற்பாடு செய்து, அதில் இருந்து தப்பிய நிலையில், மற்றொரு முறையில் கொலை அரங்கேறியது தெரியவந்துள்ளது.

Related articles

Recent articles

spot_img