தமிழகத்தில் இன்று… 5,890 பேருக்கு கொரோனா; 120 பேர் உயிரிழப்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம்
corona-virus-4
corona-virus-4

தமிழகத்தில் இன்று 5,890 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து தமிழகத்தில் இதுவரையிலான மொத்த பாதிப்பு 3,43,945 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று புதிதாக 1185 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப் பட்டது. இதை அடுத்து சென்னையில் இதுவரையிலான மொத்த பாதிப்பு 1,17,839ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக 1000க்கும் குறைவான எண்ணிக்கையில் பதிவாக வந்த கொரோனா பாதிப்பு, இன்று மீண்டும் ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து இன்று 5667 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதை அடுத்து, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,83,937 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் இன்று 120 பேர் உயிரிழந்தனர். தனியார் மருத்துவமனைகளில் 36 பேரும் அரசு மருத்துவமனைகளில் 84 பேரும் இன்று உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5886 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,705 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளதாக தமிழக சுகாதார துறை தகவல் வெளியிட்டுள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

districtwise-corona-status-aug-17
districtwise-corona-status-aug-17

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.