தூங்கிக் கொண்டிருந்த இளைஞர்! மார்பில் ஏறி அமர்ந்த சிங்கம்!

சற்றுமுன்
03 July06 Lions

உறங்கிக் கொண்டிருந்தபோது நெஞ்சின் மீது ஏறி அமர்ந்த சிங்கத்தை இளைஞர் ஒருவர் துணிச்சலுடன் விரட்டியடித்த சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது.

விபுல் கேலய்யா என்ற இளைஞர் குஜராத் மாநிலத்தில் உள்ள அபரம்பரா கிராமத்தில் வசித்து வருகிறார். பணி முடிந்து திரும்பிய அவர் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, தனது நெஞ்சை யாரோ அழுத்துவது போல் உணர்ந்த விபுல், பதறியடித்து கண்விழித்துள்ளார்.

நள்ளிரவில், சிங்கம் ஒன்று தன் மீது ஏறி அமர்ந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்துபோனார். சற்றும் அஞ்சாத விபுல், தனது முழு ஆற்றலையும் பயன்படுத்தி சிங்கத்தை தூக்கி வீசியுள்ளார். விபுலின் தாக்குதலை எதிர்பாராத அந்த சிங்கம், அங்கிருந்து தப்பி ஓடியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.