பிப்ரவரி 24, 2021, 11:02 மணி புதன்கிழமை
More

  குழந்தையை கொன்று தூக்கில் தொங்கிய தாய்!

  Home சற்றுமுன் குழந்தையை கொன்று தூக்கில் தொங்கிய தாய்!

  குழந்தையை கொன்று தூக்கில் தொங்கிய தாய்!

  tamil-selvi

  கிணத்துக்கடவு அருகே தாய் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  கிணத்துக்கடவு அடுத்த நெகமம் தாளக்கரை பகுதியை சேர்ந்த கதிரவன் என்பவரின் மனைவி தமிழ்ச்செல்வி (வயது 26). இவர்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு திருமணமாகி ஒரு வயது மூன்று மாதங்கள் ஆன யாசவி என்ற பெண் குழந்தை உள்ளது.

  கதிரவன் விவசாய வேலை செய்து வருகிறார் . தமிழ்ச்செல்வி கடந்த சில மாதங்களாக தைராய்டு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் தமிழ்ச்செல்விக்கு வயிற்றுவலியும் இருந்ததாக கூறப்படுகிறது.

  தமிழ்ச்செல்வி சிறு சிறு விஷயங்களுக்கு கூட எல்லோரிடமும் சண்டைபோட்டு கோபித்துக் கொள்வது வழக்கமாம்.

  இந்நிலையில் நேற்று மதியம் உடுமலைப்பேட்டையில் உள்ள தனது அம்மா கனக மணிக்கு போன் செய்து தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும் தனது குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறும் கூறியிருக்கிறார்.

  இதனால் அதிர்ச்சி அடைந்த கனகமணி தனது குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு நெகமத்தில் உள்ள தமிழ்ச்செல்வி வீட்டிற்கு நேற்று மாலை வந்தனர். அப்போது வீட்டின் உள்புறம் பூட்டப்பட்டு இருந்தது. கதவை வெகுநேரம் தட்டியும் திறக்காததால் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே பார்த்தனர் .

  அப்போது தமிழ்ச் செல்வியும் குழந்தை யாசவியும் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்றரை வயது குழந்தை யாசவியை கொன்று பின்னர் தாய் தமிழ் செல்வியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நெகமும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குழந்தையை கொன்று தாயும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  Support Us