நித்தியானந்தாவிற்கு கைலாசாவில் ஜல்லிக்கட்டுக்கு தலைமை தாங்கி நடத்த அனுமதி கேட்டு கடிதம்!

சற்றுமுன்
Jallikattu

நித்தியானந்தா, கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாகவும், அந்த நாட்டிற்கான கரன்சி மற்றும் ரிசர்வ் வங்கியை தொடங்கியிருப்பதாகவும் கூறி அதிர வைத்தார்.

இது ஒரு புறம் இருக்க, மதுரை ஓட்டல் அதிபர், கைலாசா நாட்டில் ஓட்டல் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கடிதம் எழுதி பரபரப்பை மேலும் கூட்டினார்.

இந்நிலையில், நித்தினாந்தாவிற்கு எழுதப்பட்ட மற்றொரு கடிதம் இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

அதில், பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி, வைரஸ் தொற்றின் காரணமாக தமிழகத்தில் நடத்த முடியாது சூழல் இருந்து வருகிறது.

எனவே கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, ஜல்லிக்கட்டு போட்டிக்கு நித்தியானந்தா தான் தலைமை தாங்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

-jalli

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.