ஏரிக்கு குளிக்க சென்ற இரு சிறுமிகளுக்கு நேர்ந்த பரிதாபம்!

சற்றுமுன் தமிழகம்
2-girls-fall-into-lake-and-die

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே, ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நாயனசெருவு பகுதியில் உள்ள கரடி குட்டை ஏரி, அண்மையில் தூர்வாரப்பட்டது. இதனால், ஏரியில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றது. அந்த ஏரியில், அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் ஜனனி, ரேகா இருவரும் குளிக்கச் சென்றுள்ளனர்.

நீச்சல் தெரியாததால், சிறுமிகள் இருவரும் ஏரியில் தேங்கி நின்ற தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் சிறுமிகளின் சடலங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். குளிக்கச் சென்ற இடத்தில் சிறுமிகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.