ரூ.100 ல் கலர் ஜெராக்ஸ்.. கடைக்காரரை ஏமாற்றிய இருவர் கைது!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
kala-notu

100 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரி கடத்தூர் அருகே தாளநத்தம் பகுதியில் 100 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்த இரண்டு இளைஞர்கள் வயது முதிர்ந்த சிறு வியாபாரிகளிடம் கொடுத்து பொருட்களை வாங்கியுள்ளனர்.

அந்த பணத்தை எண்ணும் போது கலர் ஜெராக்ஸ் போல இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மீண்டும் சில நாட்களுக்கு பிறகு அந்த இளைஞர்கள் கடையில் பொருட்கள் வாங்க வந்துள்ளனர்.

100rs

அவர்களை அடையாளம் கண்டு பிடித்த அப்பகுதி மக்கள் அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பித்துள்ளனர்.

இதுகுறித்து கடத்தூர் போலீசில் வியாபாரிகள் புகார் அளித்த நிலையில் சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து ஊத்தங்கரை தோரணம்பதியை சேர்ந்த ஆனந்தன், ராஜ்குமார் இருவரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து ஜெராக்ஸ் மிஷின், கள்ளநோட்டுகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.