மழைத் தண்ணீல மலைப் பாறையில சறுக்கி… விளையாடி… பய படுகாயம்..!

சற்றுமுன் மதுரை
thiruparankundram-malai-water
thiruparankundram-malai-water

மழைக்காலங்களில் மலை மீது தண்ணீர் அருவி போல் வருவதை பயன்படுத்தி இளைஞர்கள் சாகசம் செய்தனர். இதில், ஒருவர் படுகாயம் அடைந்தார்.

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் பகுதி பெரும்பாலும் பாறையால் ஆன மலைப்பகுதி. இதில் மழைக்காலங்களில் மேலிருந்து தண்ணீர் அருவி போல் கொட்டுவது வழக்கம்

அந்த வகையில் நேற்று மாலை திருப்பரங்குன்றம் பகுதியில் நல்ல மழை பெய்தது இந்த மழை பெய்தவுடன் மலையிலிருந்து அருவி போல் தண்ணீர் கொட்டியது. இந்தப் பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மழைக் காலங்களில் மலைமீது இருந்து வரும் தண்ணீரில் விளையாடுவது வழக்கம்.

நேற்று விளையாட்டாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒரு மாணவர் மேலிருந்து சறுக்கி விழுந்து காட்சி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சறுக்கி விழுந்த மாணவர் தற்போது சிகிச்சையில் இருக்கிறார்

உயிருக்கு ஆபத்து ஏற்படாத நிலையில் தற்போது சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாவட்ட காவல்துறை இதுபோன்று நிகழ்வுகளில் ஈடுபட்டு வரும் மாணவர்களை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.