செப்.10: தமிழகத்தில் இன்று… 5,528 பேருக்குகொரோனா உறுதி; 64 பேர் உயிரிழப்பு!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம்
கொரோனா விவரம்
கொரோனா விவரம்

தமிழகத்தில் இன்று 5,528 பேருக்கு உடல் உறுதி செய்யப்பட்டது . மேலும் 64 பேர் உயிரிழந்திருப்பதாக இன்றைய சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது 

தமிழகத்தில் மேலும் 5,528 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்தைக் கடந்துள்ளது.  தமிழகத்தில் இதுவரை கொரானா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,86,052 ஆக உயர்ந்துள்ளது 

சென்னையில் புதிதாக 991 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து சென்னையில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 145606  ஆக உயர்ந்துள்ளது 

கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட 64  பேர் ஒரே நாளில் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,154 ஆக உயர்ந்துள்ளது

இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து மேலும் 6,185 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 4,29,416  பேர் கொரோனா வைரஸில் இருந்து விடுபட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 85,473 மாதிரிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  இதுவரை பரிசோதிக்கப் பட்ட மாதிரி களின் எண்ணிக்கை 56,30,323 …

மாவட்ட வாரியாக வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் விவரம்

district-wise-corona-details-sep-10
district-wise-corona-details-sep-10

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.