அதிகாரி வீட்டில் ஐம்பொன் சிலை! போலீசார் விசாரணை!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் தமிழகம் நெல்லை
statue
statue

திருநெல்வேலியில் வீட்டில் வழிபாட்டில் இருந்த ஐம்பொன் தேவி சிலையை மீட்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

திருநெல்வேலி டவுன் சாலியர் தெரு கோவிந்தன் 74. திருநெல்வேலி மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இவரது வீட்டில் நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது பத்மாசன பீடத்தில் கையில் அல்லி மலர் ஏந்திய நிலையில் நீண்ட காதுகள், உயரமான மகுடத்துடன் கூடிய அழகிய தேவி சிலை இருந்தது. 2 அடி உயரம் 11 கிலோ எடையுள்ள சிலையை கைப்பற்றி விசாரித்தனர்.

உறவினர் கொடுத்த சிலையை 1990களில் இருந்து வழிபட்டு வருவதாக அவர் கூறினார்.சிலை 18ம் நுாற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்பதால் சிலை எங்கிருந்து கிடைத்தது என்பதில் இன்னும் சந்தேகம் உள்ளது.

இதையடுத்து சிலையை மீட்ட போலீசார், தொல்லியல் துறை உதவியுடன் அதன் தொன்மை, மதிப்பு குறித்து ஆராய உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.