டாஸ்மாக் அவலம்: திருமணமாகி இரண்டே மாதத்தில் மனைவியை கொன்ற கணவன்!

Published:

Ariyalur

அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்த தமிழரசன் (23) பால் வியாபாரம் செய்து வருகிறார்.இவருக்கும் மங்களம் கிராமத்தை சேர்ந்த பிரியதர்ஷினிக்கும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் பிரியதர்ஷினி வீட்டில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து நிலையத்தில் புகார் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரியதர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரியதர்ஷினியின் கணவர் தமிழரசனை பிடித்து விசாரித்த போது அவர் தன் மனைவியை கொலை செய்தார் என தெரியவந்தது.

ஆனால் மதுப்பழக்கத்திற்கு அடிமையான தமிழரசன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு மனைவியை கடுமையாகவும் தாக்கியுள்ளார்.

இந்நிலையில் சனிக்கிழமையன்று மதியம் மதுபோதையில் வீட்டிற்கு வந்த தமிழரசன், வழக்கம்போல தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இதில் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டபோது,கழுத்தை நெரித்து பிரியதர்ஷினியை, தமிழரசன் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து தமிழரசனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருமணமான இரண்டே மாதத்தில் புதுப்பெண் கணவனால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img