முதல்வர் வேட்பாளர் யார்? முரண்டு பிடிக்கும் அரசியல்! ஓபிஎஸ் வீட்டில் முக்கியக் கூட்டம்!

சற்றுமுன் தமிழகம்
edappadi panneerselvam
edappadi panneerselvam

அடுத்த முதல்வர் வேட்பாளர் என்பதில், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடன் பகிரங்க மோதல் நடந்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பரபரப்பான சூழ்நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற  அ.தி.மு.க., செயற்குழுவில்,  எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே பகிரங்க மோதல் வெடித்தது.அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் எழுந்த போட்டி காரணமாக, கட்சியினர் முன்னிலையில், இருவருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. இரண்டு பேருமே பிரதமர் மோடி தங்களைத்தான் நல்லாட்சி என்று பாராட்டியதாக கருத்துக்களை தெரிவித்தனர் இதையடுத்து இரு தரப்பையும், மூத்த நிர்வாகிகள் சமாதானப்படுத்தினர். இதனால்,  முதல்வர் வேட்பாளர் யார் என்பதை, அக்., 7ம் தேதி அறிவிப்பதாக அதிமுக., மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். 

இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  தனது வீட்டில் ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வழக்கமாக முதல்வர் கூட்டங்களில் பங்கேற்கும், பன்னீர்செல்வம், இன்று நடக்கும் மாவட்ட ஆட்சியர்களுடனான  ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம் நிறைவடைந்த நிலையில் இது ஒன்றும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் இல்லை என்று அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர் 

ops eps
ops eps

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர் 

 மாவட்ட ஆட்சியர்களுடனான முக்கியமான முதலமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காத ஓ பன்னீர்செல்வம் தனது வீட்டில் இன்று ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தி உள்ளார் 

நேற்று செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற நிலையில் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தினார்  நேற்று செயற்குழு கூட்டத்தில் நான்கரை மணிநேரத்திற்கு மேல் முதல்வர் வேட்பாளர் குறித்து காரசார விவாதம் நடந்தது. 

இந்நிலையில் அந்தக் கூட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த வைத்திலிங்கம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இடையே எந்தவித குழப்பமும் இல்லை என்றும் ஓ.பி.எஸ். இல்லத்தில் நடந்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் இல்லை என்றும் தெரிவித்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.