அக்.18: தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம்
corona-image
corona-image

தமிழகத்தில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 914 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 56 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நீண்ட நாட்களுக்கு பிறகு நான்காயிரத்திற்கும் குறைவாக பதிவாகியுள்ளது . தமிழகத்தில், புதிதாக 3 ஆயிரத்து 914 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதனால் தமிழகத்தில் இதுவரையிலான ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 6,87,400 ஆக அதிகரித்துள்ளது 

சென்னையில் புதிதாக 1036 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து சென்னையில் இதுவரையிலான  கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு  1,89,995  ஆக உயர்ந்துள்ளது

 தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்டு 56 பேர் உயிரிழந்தனர் இதையடுத்து தமிழகத்தில்  கொரோனா பாதிக்கப்பட்டு  இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,642 ஆக அதிகரித்துள்ளது 

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 4 ஆயிரத்து 929  பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 37 ஆயிரத்தை கடந்துள்ளது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.