பாவூர்சத்திரத்தில் டெங்கு தடுப்பு பணியில் ஆச்சர்யப்படுத்திய ஆட்சியர்

Published:

நெல்லை மாவட்டம் தென்காசியை பாவூர்சத்திரம் குறும்பலாபேரி, மேலப்பாவூர் குலசேகரப்பட்டி, சடையப்பபுரம், ஆகிய ஊர்களில் சமீபத்தில் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்துள்ளது. இந்தப் புகார்களின் அடிப்படையில் இந்த பகுதிகளை  மாவட்ட கலெக்டர் சந்திப்நந்தூரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அதிகாரிகள் ஆட்சியர் வரும் இடங்களை சுத்தம் செய்து தயார் நிலையில் வைத்திருந்தனர் ,ஆனால் யாரும் எதிர்பாரா வண்ணம் ஆட்சியர் வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார் அப்போது அங்கு சரிவர பணிகளை மேற்க்கொள்ளாத அதிகாரிகளை கடிந்துகொண்டார் பின்னர்  பாவூர்சத்திரம் காமராஜ் நகர் வடக்கு பகுதியில் வசிப்பவர் அழகு முருகன் இவரது மகள் இசக்கி (வயது 9) இந்தச் சிறுமி  அருகிலுள்ள யூனியன் பள்ளியில் மூன்றாவது படித்து வருகிறார் . மேலும் அதே பகுதியைச் சேர்ந்தவர் இராமசுப்பிரமணியன்  இவரது மகன் சுபிக்ஷன்(6 மாத குழந்தை).  இந்த இரண்டு குழந்தைகளும் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தென்காசியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்தக்  குழந்தைகளின் வீடுகளுக்கு நேரில் சென்று குழந்தைகளின் நலன் குறித்து அக்கறையோடு நலம் விசாரித்தார் ,அவ்வீட்டின் சுற்றுப்புறத்தை பார்வையிட்டு அறிவுரை வழங்கினார்

பின்னர் யூனியன் நிர்வாகம் மூலம் அந்த பகுதியில் மேற்கொண்டுள்ள சுகாதார நடவடிக்கைகள், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளில்  கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்தார். பின்னர் அவர் பாவூர்சத்திரம் காவல்  நிலையத்தில் விபத்து  மற்றும் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் குவிந்து கிடப்பதை அவர் பார்வையிட்டு அந்த வாகனங்களின் பெட்டிகளில் அவ்வப்போது பெய்யும்மழை நீர் தேங்கி கிடந்து அதில் டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் லார்வா புழுக்கள்   கிடப்பதை பார்வையிட்டு அவற்றை அப்புறப்படுத்த சுகாதாரத்துறையினருக்கு  உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது பாவூர்சத்திரம் அரசு டாக்டர் ராஜ்குமார், யூனியன் ஆணையாளர்கள் ராதா, ஜனார்த்தனன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா, ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக யூனியன் அலுவலகத்தை ஆய்வு செய்த கலெக்டர் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த கழிவறை கோப்பைகளில் தண்ணீர் தேங்கிக் கிடப்பதை பார்த்து யூனியன் ஆணையாளர்களை எச்சரித்தார். அதேபோல் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர்ராஜ் என்பவரையும் எச்சரித்தார்.
மேலும் அப்பகுதியில் பீடி சுற்றும் தாய்மார்ககளை சந்தித்து அதன் மூலம் அவர்கள் ஈட்டும் வருவாய்,குடும்ப நிலைகுறித்து கனிவோடு கேட்டறிந்தார் ஆட்சியர் மிகவும் எளிமையாக நடந்துகொண்டதை பார்த்து அப்பகுதி பெண்கள் ஆச்சர்யமடைந்தனர்

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

Related articles

Recent articles

spot_img