கன மழை… தமிழகத்தில் மஞ்சள் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம்!

Published:

imdchennai-sattelite-pic
imdchennai-sattelite-pic

கன மழையை தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், தென்காசி, ராணிப்பேட்டை, விருதுநகர், நெல்லை ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக் கூடும் என்று, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதலே கனமழை பெய்யத் தொடங்கியது. விடிய, விடிய நீடித்த மழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

alert
alert

இந்த நிலையில், அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 8 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன் படி, சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

சென்னையில் விடிய விடிய பெய்த பலத்த மழையால் பல இடங்களில் மரங்கள் சாலைகளில் விழுந்துள்ளன. மயிலாப்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img