காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜனுக்கும் காங்கிரசின் தலைவர்களில் ஒருவரான கோபண்ணவுக்கும் இப்போது வாய்த்தகராறு முற்றி உள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கி வருகின்றனர்
முன்னதாக காங்கிரசில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் இன்று ப.சிதம்பரத்துடன் ஆலோசனை நடத்தினார்
உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என கருத்து கூறியதால் கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கராத்தே தியாகராஜன் எனக்கு மட்டும் காங்கிரஸில் நெருக்கடி தருகின்றனர் என்றார்.
கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் ப.சிதம்பரத்தை சந்தித்த பின் கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் ..ஶ்ரீ நான் ராஜீவ் காந்தியின் ரத்தத்தை பார்த்தவன், கடைசி வரை காங்கிரஸ் காரனாகவே இருப்பேன் என்று ப.சிதம்பரத்துடனான சந்திப்புக்கு பின், காங்கிரசில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் கூறினார்.
மேலும் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என்று கூறி உள்ளார்.
இதனிடையே காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கோபண்ணா குறித்து கராத்தே தியாகராஜன் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்
என் மீது கராத்தே தியாகராஜன் கூறிய அவதூறு குற்றச்சாட்டில் உண்மையில்லை; எனது தந்தை கொடுத்த நிலத்தை தவிர எனக்கு எந்த சொத்தும் இல்லை.என்று கூறியுள்ளார் கோபண்ணா.
காங்கிரஸில், கராத்தே தியாகராஜனுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை என்பதால், அதிமுக – பாஜக தூண்டுதலின் பேரில், காங். – திமுக கூட்டணியை முறிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டிய கோபண்ணா, கராத்தே தியாகராஜன், இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு திமுகவின் அழுத்தம் காரணமல்ல என்று எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற ரீதியில் விளக்கம் அளித்தார் கோபண்ணா.
மேலும் காங்கிரஸ் சொத்துக்களை கொள்ளை அடித்ததாக என்மீது கராத்தே தியாகராஜன் கூறும் குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்றது என்றும், என் தந்தை என்னிடம் வழங்கிய விவசாய நிலத்தை தவிர, என்னிடம் எந்த சொத்துக்களும் இல்லை என்றும் கைையை விரித்தார் கோபண்ணா.




