சனிக்கிழமை ரொம்ப விசேஷம்!
பெருமாளை வணங்குவதற்கு உரிய அற்புதமான நாள்.
ஸ்ரீஅனுமனைத் தரிசிப்பது, மிகுந்த பலனைத் தரும்

ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு உகந்த தினம்.
ஸ்ரீபெருமாளை வணங்கிவிட்டு, புளியோதரை மற்றும் தயிர்சாதம் அன்னதானம் செய்வது வீட்டில் சுபிட்சத்தைத் தரவல்லது.
ஸ்ரீஅனுமனுக்கு வடைமாலை சார்த்தி, பக்தர்களுக்கு விநியோகிப்பது ஆன்ம பலத்தையும் தேக பலத்தையும் வழங்கும்! எதிரிகள் தொல்லை ஒழியும்.
ஸ்ரீசனீஸ்வரரைப் பிரார்த்தித்து விட்டு, காகத்துக்கு எள் அன்னமிடுவது, சனி தோஷத்தை விலகச் செய்யும்; பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்!



