
ரூ.79 கோடி மதிப்பீட்டில் செங்கோட்டை- புனலுார் ரயில்பாதை மின்மயமாக்கும் திட்டம். மத்திய ரயில்வே துறை அறிவிப்பு…..!
நெல்லை மாவட்டம், செங்கோட்டை, கேரள மாநிலம் புனலூர் இடையிலான ரயில் பாதையை மின்மயமாக்கும் திட்டம் தயாராகி வருவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதற்காக 79 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் “அடுத்த மாதம் டெண்டர் அறிவிக்க ஏற்பாடுகள்” – நடந்து வருவதாகவும் மத்திய ரயில்வே அமைச்சர் தகவல்
மேலும் 2019-20 ஆம் ஆண்டில் ஏழாயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கான ரயில் பாதையை மின்மயமாக்க திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் மத்திய ரயில்வேத்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.



