
நடிகை அமலாபால் உடன் விவகாரத்து ஏற்பட்ட பின்னர், தற்போது இயக்குனர் விஜய் இரண்டாவது திருமணம் செய்ய வுள்ளார். சென்னையைச் சேர்ந்த டாக்டரை மணக்கவுள்ளார்.
தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன் ஏ.எல்.விஜய். இயக்குனர் பிரியதர்ஷனிடம் உதவியாளராக இருந்து பின்னர் அஜித் நடித்த கிரீடம் படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். மதராசபட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம், தலைவா, சைவம், வனமகன், தேவி உள்பட பல படங்களை இயக்கினார். தற்போது ஜெயலலிதா வாழ்க்கை படமான தலைவி படத்தை இயக்கி வருகிறார்.
தெய்வதிருமகள் படத்தின் போது, நடிகை அமலாபாலுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் 2014ல் திருமணம் செய்து பின்னர் 3 வருடங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர்.
இந்நிலையில் விஜய் 2வது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு, அனிதா தம்பதிகளின் மகள் டாக்டர் ஐஸ்வர்யாவை மணக்கிறார்.
டாக்டர் ஐஸ்வர்யா, தனியார் மருத்துவமனை ஒன்றில் பொதுநல மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்களது திருமணம் ஜூலை 11ஆம் தேதி சென்னையில் நடக்கிறது.



