
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, சென்னையில் அடுத்த 24 மணி நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை இரவு நேரங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.



