December 6, 2025, 8:14 AM
23.8 C
Chennai

அத்திவரதர் ஏன் 40 ஆண்டுகள் கழித்து வெளியே வருகிறார்?

varadhar vasanthamandapam - 2025

காஞ்சிபுரம் அத்தி வரதரின் வரலாறு:

அத்தி வரதர் அத்தி மரத்தால் கிருத யுகத்தில் விஸ்வகர்மாவால் வடிவமைக்கப்பட்ட நான்கு பிரம்மாக்களும் ஆராதித்த வரதராஜ மூர்த்திகளில் ஒன்று.

இவரே கோவில் கர்ப்பகிரகத்தின் உள்ளே புண்ணிய கோடி விமானத்தின் கீழ் பதினாறாம் நூற்றாண்டு வரை மூலவராக இருந்தார்.

முஸ்லிம் படையெடுப்பினால் மூல மூர்த்திகளைக் காப்பாற்ற கோவில் குளத்தினுள் அத்தி வரதர் மறைத்து வைக்கப்பட்டார். அவர் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடம் ஒரே ஒரு குடும்பத்துக்கு மட்டுமே தெரியும். பின் வந்த 40 வருடங்களில் அக்கோவிலில் மூலவரே இல்லாமல் பூஜைகள் செய்யப்படாமல் பாழடைந்திருந்தது.

அந்த சமயத்தில் அத்தி வரதரின் மறைவிடத்தை அறிந்தவர்களான, தர்மகர்த்தாகளாக இருந்த தத்தாச்சாரியா குடும்பத்து இரு சகோதரர்களும் இதற்குள் இறந்து விட்டனர். கோவிலில் வரதரை மீண்டும் அமைத்து பூஜைகள் செய்ய விரும்பி அவர்களின் இரு மகன்கள் வரதரைத் தேடி கிடைக்காததால் ஒரு மாத்வரின் உதவியோடு உடையார் பாளையம் வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உற்சவ மூர்த்திகளை மட்டும் கண்டுபிடித்துக் கோவிலில் வைத்துப் பூஜைகளைத் தொடங்கினர்.

மூலவர் அத்தி வரதரை கண்டுபிடிக்க முடியாததால் கோவில் அதிகாரிகள் 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பழைய சீவரம் என்னும் ஊரில் பத்ம கிரி என்னும் மலையின் மேல் மூன்று நதிகளான பயஸ்வினி, வேகவதி, பஹுநதி ஆகியவை கூடும் இடமான முக்கூடல் பகுதியில் இருந்த கல்லால் ஆன தேவராஜா சுவாமி என்னும் பெருமாளை அத்தி வரதரைப் போல இருந்ததால் எடுத்து வந்து அத்தி வரதரின் மூல மூர்த்தி இருந்த இடத்தில் அந்த விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபாட்டைத் தொடங்கினர்.இந்த விக்கிரகத்துக்கு அத்ரி ரிஷி கராச்சித மூர்த்தி என்று பெயர்.

1709 வருடம் ஏதோ ஒரு காரணத்தால் கோவிலின் குளம் முழுவதும் வற்ற வைக்கப்பட்டது. அப்பொழுது அத்தி வரதர் அங்கு இருப்பது தெரிய வந்தது. அதனால் அதிகாரிகள் 40 வருடங்களுக்கொரு முறை அந்த விக்கிரகத்தை புஷ்கரணி நீரில் இருந்துவெளியே எடுத்து ஒரு மண்டலமான 48 நாட்கள் பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் நீருக்குள் வைத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

கலியுகத்தில் வரதரை பூசிப்பது சேஷன், அவர் வசிப்பது நீரில். அதனால் அத்தி வரதர் அவராகவே விருப்பப்பட்டு தான் நீரில் இருந்தார் என்கிற நம்பிக்கையே இம்முடிவுக்குக் காரணம்.

மற்றபடி அள்ளி விடும் கதைகள் டூபாக்கூர்…இப்போதும் நீங்க எங்காவது சிலைகள் மண்ணில் அடியிலிருந்து கிடைத்தது என செய்தி படிக்கலாம்..அவை அனைத்தும் பாதுகாப்பு கருதி புதைக்கப்பட்டவையே ,,கால ஓட்டத்தில் மறந்து விட்ட காரணத்தால் இன்று வெளிப்படுகின்றனர்…. அதில் ஒன்று தான் அத்தி வரதர்…

இதற்கு ஆதாரம் என்ன என கேட்கலாம்… மக்கள் அனுதினமும் பூஜிக்க தான் கோவில்களும் இறை மூர்ததங்களும்.. .அதை தண்ணீரில் மறைத்து வைத்து 40 வருடம் கழித்து தான் வணங்க முடியும் என எந்த ஏற்ப்பாடும் செய்யப்பட்டு இருக்காது…

இன்னும் சொன்னால் ஶ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் மூலவர் முஸ்லிம் படையெடுப்பின் போது மண்ணில் மறைத்து வைத்து பின்பு வெளி வந்தவரே..

முஸ்லிம் படையெடுப்பால் அத்தி வரதர் தண்ணீரில் மறைத்து வைக்கப்பட்டார் என்பது நைசாக மறைக்கப்பட்டு, பிரம்மா சொன்னார் என கதை கட்டி நம் மண்டையை கழுவுகின்றனர்…

எது எப்படியோ 40 ஆண்டு கழித்து வெளியே வரும் அத்தி வரதரை தரிசிக்க லட்ச்சோப லட்சம் பக்தர்கள் தயாராகி வருகின்றனர்… அனைவருக்கும் வேண்டும் வரத்தை அத்தி வரதர் வழங்கி அருள் புரியட்டும்…

இது பெரியார் மண், பகுத்தறிவு மண் என பேசும் பொறுக்கிகளுக்கு திரளும் பகதர்கள் கூட்டம் பதில் தரட்டும்…

தமிழகம் என்றுமே ஆன்மீக மண் என செருப்பால் அடித்து பதில் தரட்டும் ..

~ Pugal Machendran (புகழ் மச்சேந்திரன்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories