ஆர்.கே.நகரில் விஷால் போட்டி: எதிர் வினைகள்!

சற்றுமுன்

ஆர்.கே. நகர் தொகுதியில்
நடிகர் விஷால் போட்டி இடப் போவதாக அறிவித்துள்ளார்.

திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்தார் விஷால். இதனிடையே அவரது அறிவிப்புக்கு எதிர் வினையாக சிலர் கருத்துக்களை தெரிவித்தனர்.

அந்தக் கருத்துகள்…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதால் என்ன லாபம்? என்று இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பினார்.

ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிடுவதால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படலாம் என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார். யாரை எதிர்த்து எந்த நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகிறார் விஷால் என இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழப்பார் நடிகர் விஷால் என்று கோபமாக கூறியுள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

தேர்தல் என்பது விளையாட்டுத்தனமாக மாறிவிட்டது என்று ஆர்.கே.நகர் தேர்தலில் விஷால் போட்டியிடுவது குறித்து எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலில் போட்டியிடுவதே புத்திசாலித்தனமாக இருக்கும் என்று எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்

விஷால் முதன்முதலாக அரசியலுக்கு வருவதால் மக்கள் சிந்திப்பார்கள்

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

ட்விட்டரில் சிலர் அறிக்கை மட்டுமே விடும் நிலையில் களத்தில் விஷால் இறங்குவது பாராட்டத்தக்கது

திமுக-அதிமுக இடையே நடக்கும் போட்டியே பிரதானமானது என்று பத்திரிகையாளர் சுமந்த் சி.ராமன் கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.