கமலுக்கு மீண்டும் கிடைக்குமா டார்ச்லைட் சின்னம்? – பரபரப்பு தகவல்

Published:

நடிகர் கமல்ஹாசன் சில வருடங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் என்கிற அரசியல் கட்சியை துவங்கினார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் ‘டார்ச்லைட்’ சின்னத்தை ஒதுக்கியது. மேலும், அந்த தேர்தலில் நகர்புறங்களில் மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளை பெற்றது.

இந்நிலையில், வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு அக்கட்சி தயாராகி வருகிறது. ஒரு சின்னத்தை 2 முறை ஒரு பயன்படுத்தலாம் எனக்கூறி மீண்டும் ‘டார்ச்லைட்’ சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு மக்கள் நீதி மய்யம் கடிதம் எழுதியுள்ளது.அதை பரிசீலித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கவுள்ளது.

கமல்ஹாசன் கையில் டார்ச்லைட் வைத்திருப்பது போல் இப்போதும் புகைப்படங்கள் வெளிவந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img