மூணாவது அணி சாத்தியமே! ஆனா எப்போ சாத்தியம்னு இப்போ தெரில: கமல்ஹாசன்!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
kamal-in-madurai
kamal-in-madurai

மூன்றாவது அணி அமையுமா என்ற கேள்விக்கு; சாத்தியமே… ஆனால் எப்போது சாத்தியம் என்பதை இப்போது பெறமுடியாது என்று கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார்

வருகிற 2021 சட்டமன்றத் தேர்தலுக்காக சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தனது முதலாம் கட்ட பிரச்சாரத்தை மதுரை மற்றும் நெல்லை மண்டலங்களில் இன்று முதல் டிசம்பர் 16 வரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

அந்த வகையில் இன்று மதுரையில் இருந்து துவங்குவதற்காக கமல் ஹாசன் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தவர், செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;

kamal-interview
kamal-interview

காவல்துறையினரால் கடைசி நேரத்தில் தடை விதித்துள்ளனர், எங்களுக்கு தடைகள் புதிது இல்லை. தடைகள் குறித்து அனுபவம் இருக்கிறது, அதற்கான ஒத்திகையும் பார்த்து விட்டோம். பதற்றமின்றி மக்களை சென்று சேர்வோம்.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் எதற்கு என்று டுவிட் செய்தது மோடிக்கு பாக் செய்யவில்லை என்ற கேள்விக்கு.? தற்போது செய்து விடலாம்.

கடந்த முறை தேர்தல் பிரச்சாரத்தின்போது சர்ச்சையான கருத்தால் பிரச்சாரம் தடைபட்டது குறித்த கேள்விக்கு; கருத்து யாருக்கு குத்தலாக இருக்குமோ அவர்கள் தடைகளை செய்வார்கள், அதனை மீறியும் பிரச்சாரம் தொடரும்.

மக்கள் நீதி மய்ய மற்றும் ஆன்மீக அரசியல் ஒன்று சேருமா என்ற கேள்விக்கு; கட்சிகள் பிளவு பெற வாய்ப்பும் உள்ளது, கூடவும் உள்ளது அதனை மட்டும் கூற இயலும்.

மூன்றாவது அணி அமையுமா என்ற கேள்விக்கு; சாத்தியமே… ஆனால் எப்போது சாத்தியம் என்பதை இப்போது பெறமுடியாது என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.