பணப்பட்டுவாடா நடக்கிறது; புகார் சொல்லும் தமிழிசை!

சற்றுமுன் சென்னை

ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடாவைத் தடுக்க வலியுறுத்தி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வேட்பாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பட்டப்பகலில் நடக்கும் பணப் பட்டுவாடாவைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக., மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை விடுத்தார்.

சென்னை ஆர்கே நகரில் வீட்டுக்கு வீடு பணப்பட்டுவாடா நடப்பதாக கூறி புது வண்ணாரப்பேட்டையில் பா.ஜ., வேட்பாளர் கரு.நாகராஜன், மாநில தலைவர் தமிழிசை தலைமையில் பா.ஜ.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது தமிழிசை செய்தியாளர்களிடம் பேசுயைில், பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் அதிகாரி நேரில் வந்து வீட்டுக்கு வீடு ஆய்வு விசாரிக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும். ஊழல்வாதிகள் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலக்க வேண்டும். தஞ்சாவூரை சேர்ந்த ஆயிரகணக்கானோர் ஆர்கே நகரில் தங்கியுள்ளனர். தெருவுக்கு தெரு டேபிள், சேர் போட்டு அமர்ந்துள்ளனர். பணப்பட்டுவாடாவுக்கு கணக்கெடுப்பு நடத்துகின்றனர். பட்டியல் போட்டு பணம் கொடுக்கின்றனர். நேர்மையாக தேர்தலை நடத்த முயன்றால் நடத்துங்கள். இல்லையென்றால், தேர்தலை இழுத்து மூடுங்கள் எனக் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.