மின்சார ரயிலில் அசந்து தூங்கிய பெண்! இருவரால் பணிமனையில் நடந்த வன்கொடுமை!

Published:

vankodumai

சென்னையை அடுத்த தாம்பரத்தில் மின்சார ரயிலில் தூங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அடுத்த பரனுரை சேர்ந்த 40 வயதான ஒரு பெண், கடந்த 8-ம் தேதி இரவு பல்லாவரத்தில் இருந்து பரனூர் செல்ல செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயிலில் ஏறினார். குடிபோதையில் இருந்ததால் அப்பெண் அயர்ந்து தூங்கியதாக தெரிகிறது. இதனால் அந்த மின்சார ரயில் செங்கல்பட்டு சென்று அங்கிருந்து மீண்டும் கடற்கரை ரயில் நிலையத்திற்கு சென்று, மீண்டும் தாம்பரம் வந்துள்ளது. அதன்பின், தாம்பரம் ரயில்வே பணிமனைக்கு சென்றுள்ளது.

நள்ளிரவு 1.00 மணியளவில் அப்பெண் கண் விழித்து பார்த்தபோது பணிமனையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இரவு நேரம் என்பதால் வெளியே செல்ல பயந்த அவர் ரயில் உள்ளேயே இருக்க முடிவு செய்தார்

அப்போது அங்கு வந்த தற்காலிக ஊழியர்கள் சுரேஷ் (30), அப்துல் அஜிஸ் (30) ஆகிய இருவரும் தனியாக இருந்த பெண்ணை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இங்கு நடந்ததை வெளியே சொல்லக்கூடாது என அப்பெண்ணை மிரட்டி அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து அப்பெண் தாம்பரம் ரயில்வே போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுரேஷ் மற்றும் அப்துல் அஜிஸ் இருவரையும் கைது செய்தனர்.

ALSO READ:  தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img